Home கனடா முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற பரிந்துரை

முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற பரிந்துரை

by Jey

முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென கனேடிய நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தேசிய ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது.

சிரேஸ்ட பிரஜைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் மாத்திரை பெற்றுக்கொண்டு ஆறு மாதங்களின் பின்னர் இந்த மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 80 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பைசர் மற்றும் மொடர்னா ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் இவ்வாறு பூஸ்டர் மாத்திரையாக ஏற்றப்பட உள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

 

related posts