Home உலகம் சூடான் மோதல்களில் 11 பேர் பலி

சூடான் மோதல்களில் 11 பேர் பலி

by Jey

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன் பின்னர் மக்கள் போராட்டம் மற்றும் ராணுவ கிளர்ச்சியையடுத்து ஒமர் அல்-பஷீர் சூடான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு சூடானில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராணுவத்தினர் கடந்த 25-ம் தேதி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். மேலும், ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோவையும் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுனர். அந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சூடானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

related posts