றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழு மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து ஆணைக்குழுவினால் பராமரிக்கப்பட்டு வரும் செயலிகள் சில உரிய முறையில் செயற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை இந்த சைபர் தாக:குதல் பற்றி அறிந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இந்த தாக்குதல் பெரிதாக தென்படவில்லை என்ற போதிலும், பின்னர் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.