Home உலகம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கப்படும்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கப்படும்

by Jey

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று அதிகரித்த காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நவம்பர் முதல் நீக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும் பல தளர்வுகளையும் அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் 18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் அறிவித்த தளர்வுகள் மூலம், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல முடியும். வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் அவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்த தேவையில்லை. தடுப்பூசி போடாதவர்கள் நாட்டிற்குள் வரும்போது 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நியூசிலாந்து நாட்டிற்கு மக்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

related posts