முதல்கட்டமாக, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுலாத் துறைகளைச் சோ்ந்தவா்களுக்கு பைசா் தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். அதன்பின்னா் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்தப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் கடந்த மாதம் விலக்கி கொள்ளப்பட்டன. இதன்பிறகு அங்கு பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலில்தான் அங்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 62சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். இலங்கையில் தற்போது தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 500- க்கும் கீழ் உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 20- க்கும் கீழ் பதிவாகி வருகிறது.