Home கனடா பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவருக்கு தண்டனை

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவருக்கு தண்டனை

by Jey

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ பாடசாலையொன்றில் சக மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்க்ப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் குறித்த மாணவருக்கு நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் குறித்த மாணவர் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை உருவாகாது என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

related posts