தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன. இதில், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய மேலும் 20 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.