Home இந்தியா தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு

by Jey

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தென் மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், டெங்கு அதிகமாகவுள்ள தமிழகம், கேரளா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஜம்மு – காஷ்மீருக்கு மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழு சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்தியகுழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தாண்டு அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 86 சதவீதம் 15 மாநிலங்களிலிருந்து பதிவானது குறிப்பிடத்தக்கது.

related posts