இன்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜிவ் குமார் கலந்து கொண்டு பேசினார்.
அதில் “நம் நாட்டில் 2021-2022ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறைந்தது 10% சதவீதமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். 2021-2022ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5% அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று சிலர் கூறுவது தவறானது.
வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% சதவீதமாக இருக்கும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-6.5% சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது. ஆனால், 2022-2023ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 8% சதவீதமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்”