பழங்குடியின சிறார்கள் மரண விபரங்களை ஓன்றாரியோ மாகாண அரசாங்கம் வெளியிட உள்ளது.
சுமார் 1800 பழங்குடியின சிறார்கள் பற்றிய விபரங்கள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உண்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த தேசிய நிலையத்திற்கு இந்த விபரங்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2015ம் ஆண்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனவும், ஏனைய மாகாணங்களும் இவ்வாறு தகவல்களை வெளியிட முன்வர வேண்டுமெனவும் உண்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.