றொரன்டோவில் அண்மையில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடுர்பில் பொலிஸார் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர், பதில் பிரதானி மய்ரோன் டெமிக்கிவ், இன்ஸ்பெக்டர் ஹான்க் இட்சிங்கா உள்ளிட்டவர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஓர் வார இறுதியில் மட்டும் எட்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சனியன்றும் 67 வயதான பெண் ஒருவர் அவரது மகனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்த ஆண்டில் மட்டும் றொரன்டோ நகரில் மட்டும் 74 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகளவான வன்முறகைள் சம்பவங்கள் இடம்பெறுவது குறித்து பொலிஸார் மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.