Home உலகம் உலக நாடுகளில் உள்ள சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாசு பாதிப்பு….

உலக நாடுகளில் உள்ள சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாசு பாதிப்பு….

by Jey

கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பாண்டில் உலக அளவில் காற்றில் கலக்கும் கார்பன்-டை-ஆக்சைடு அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக்கழக ஆய்வாளர் கோரின் லீகுயர் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

காற்றில் கலக்கும் பல்வேறு வாயுக்களில் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வு உலகளாவிய சூழலியல் மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன. இந்த நிலையில், உலக அளவில் பெரிய நாடாக உள்ள சீனா தனது மின்சார தேவைகளுக்காக அணு உலைகளில் நிலக்கரியை எரிக்கிறது. அதன் காரணமாக வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடு மற்ற நாடுகளை விட அதிகம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் சீனாவில் கார்பன்டை-ஆக்சைடு வெளியேற்றம் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

உலகளாவிய பொது முடக்கத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகளில் உள்ள பெருநகரங்களில் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு பாதிப்பும் குறைந்துள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் வெப்பநிலை 1.5 டிகிரி மட்டுமே உயர்ந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் இன்னும் இதை குறைக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலகலாவிய கார்பன் பாதிப்பு அளவில் சீனாவின் பங்கு நடப்பாண்டில் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் அளவு 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதர ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை கணக்கிடும்போது அவற்றின் கார்பன் பாதிப்பும் நடப்பாண்டில் பெரும் அளவுக்கு குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts