12 வயதுக்கும் குறைந்தவர்களே அதிகளவில் கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்காகின்றனர் என கனேடிய பெர்துச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி திரேசா டேம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மொத்த கோவிட் நோய்த் தொற்றாளிகளில் 20 வீதமானவர்கள் 12 வயதுக்கும் குறைந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய வயதுப் பிரிவினர்களுக்கு பெரும்பாலும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில், 12 வயதுக்கும் குறைந்தவர்களே அதிகளவில் நோய்த் தொற்றுக்கு அதிகளவில் இலக்காகின்றனர் என தெரிவித்துள்ளார்.