Home உலகம் ஜெர்மனியில் ரயிலில் கத்தி குத்து 3 பேர் காயம்

ஜெர்மனியில் ரயிலில் கத்தி குத்து 3 பேர் காயம்

by Jey

ஜெர்மனியில் சமீப காலமாக பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. 2015- ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு அவ்வப்போது பயங்கரவாத ஆதரவு நபர்களால் தாக்குதல் நடத்தும் போக்கு காணப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியின் வுர்பர்க் நகரில் சோமாலிய நாட்டை சேர்ந்த ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் ஐரோப்பிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜெர்மனியில் பவாரியா நகரில் அதிவேக ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் அவரின் நோக்கம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடந்த அதிவேக ரெயில் செயுபெர்ஸ்டோர்ப் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து பணியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

related posts