உயிர்ப் பல்வகைமையை பாதுகாப்பதற்கு பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கனேடிய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
கனேடிய சுற்றாடல்துறை அமைச்சர் Steven Guilbeault இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சர்வதேச காலநிலை நிதியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் 5.3 பில்லியன் டொலர்களில் 20 வீதம் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளாஷ்கோ காலநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரிய வகை உயிரினங்கள் அழிவடைவதனால் ஏற்படக்கூடிய இயற்கை சமநிலையின்மையை தவிர்ப்பதற்கு கூடுதல் முனைப்பு காட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்ப் பல்வகைமையை பாதுகாக்கத் தவறினால் அது சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.