தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலம் மேலும் வழுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.