Home இந்தியா லட்சம் பயணிகளை கையாண்ட பெங்களூரு விமான நிலையம்

லட்சம் பயணிகளை கையாண்ட பெங்களூரு விமான நிலையம்

by Jey

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பீதி காரணமாக பயணிகள் விமானங்களில் செல்வதில் தயக்கம் காட்டினர்.

தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விமானங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை முன்பு போல் அதிகரித்து உள்ளது. இதுபோல் கர்நாடகத்தில் உள்ள விமான நிலையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பெங்களூரு விமான நிலையத்தை 24 லட்சத்து ஆயிரத்து 170 பேர் பயன்படுத்தி இருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 55 லட்சத்து 60 ஆயிரத்து 468 பயணிகளை பெங்களூரு விமான நிலையம் கையாண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெங்களூருவில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு 52 லட்சத்து 33 ஆயிரத்து 933 பேர் விமானங்களில் பறந்து உள்ளனர். வெளிநாடுகளுக்கு 3 லட்சத்து 26 ஆயிரத்து 635 பேர் சென்று உள்ளனர். மேற்கண்ட தகவலை இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

related posts