மொன்றியல் நகரசபை தேர்தலில் வெலரி பிளான்ரி முன்னிலை வகிக்கின்றார்.
கனடாவின் இரண்டாவது பெரிய நகரமான மொன்றியல் நகரசபை தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐம்பது வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பிளான்ரி பெற்றுக்கொண்டு முன்னிலை வகிக்கின்றார்.
முன்னாள் மேயர் டெனிஸ் கொடேரவை விடவும் பிளான்ரி கூடுதல் வாக்குகள் பெற்றுக்கொண்டுள்ளார்.
கியூபெக்கின் ஐந்து பிரதான நகரங்களில் நான்கு நகரங்களினது மேயர்களாக பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிளான்ரியின் வெற்றிக்கு கியூபெக் பிரதமர் பிரான்கோயிஸ் லெகுலாட் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.