Home இந்தியா யமுனையில் ரசாயனம் கலந்த நுரை

யமுனையில் ரசாயனம் கலந்த நுரை

by Jey

வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். சாத் பூஜையை பெரும்பாலும் பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே கொண்டாடுகின்றனர். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள். இந்த ஆண்டின் சாத் பூஜை இன்று தொடங்கியது.

இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி டெல்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கலிந்தி கஞ்ச் அருகே யமுனா நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். யமுனையில் ரசாயனம் கலந்த நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.

சாத் பூஜையை பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். தற்போது நாட்டின் பிற பகுதிகளிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறியிருப்பதால் அந்தந்த மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடுகின்றனர்.

related posts