ஒன்றாரியோ மாகாணத்தில் இனவாத செயற்பாடுகளை தடுக்க சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென இஸ்லாமிய தலைவர்கள் கோரியுள்ளனர்.
Our London Family சட்டம் என்னும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென இஸ்லாமிய தலைவர்கள் கோரியுள்ளனர்.
திட்மிட்ட அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரோத செயற்பாடுகள் அல்லது இஸ்லாமிய வெறுப்புணர்வு காரணமாக எந்தவொரு உயிரையும் மேலும் இழந்து விடக் கூடாது என கனேடிய முஸ்லிம்களுக்கான தேசிய பேரவையின் பிரதம அதிகாரி நாடியா ஹசன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வன்முறைகள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனக்குரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தக் கூடிய நல்ல அம்சங்கள் இந்த சட்டத்தில் காணப்படுவதாகவும் மாகாண அரசாங்கம் இதனை அமுல்படுத்த வேண்டுமேனவும் இஸ்லாமிய தலைவர்கள் கோரியுள்ளனர்.