சஸ்கட்ச்சாவன் வதிவிடப் பாடசாலையில் அடையாளப்படுத்தப்படாத புதைகுழிகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சஸ்சகட்ச்வானின் Qu’Appelle இந்திய கைத்தொழில் வதிவிடப்பாடசாலையில் காணப்படும் புதைகுழிகளே இவ்வாறு தேடப்படுகின்றது.
சுமார் 55 ஏக்கர் காணிப் பரப்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணை ஊடறுத்துச் செல்லக்கூடிய ராடார் கருவிகளைக் கொண்டு இந்த தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நடவடிக்கையானது சில வேளைகளில் மூன்றாண்டு காலம் வரையில் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வதிவிடப்பாடசாலைகளுக்குச் சென்று வீடு திரும்பாத தங்களது உறவினர்கள் பற்றிய ஏதேனும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக பூர்வகுடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.
காம்லூப்ஸ் வதிவிடப்பாடசாலையில் 215 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வதிவிடப்பாடசாலைகளில் இவ்வாறான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.