யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொட்டித் தீர்க்கும் மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளக் காடாகவே காட்சியளிக்கின்றது.
கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் பெரும் மழை பொழிகின்றது. இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றது.
இதேநேரப் யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபெரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தி நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் நீர் மிக வேகமாக நிர் அதிகரிப்பதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர் நோக்குகின்றனர்.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சி மாறியபோதும் காட்சி மாறவில்லை என வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.