Home கனடா காலநிலை மாற்றத்தினால் நோய்வாய்ப்பட்ட கனேடிய பெண்

காலநிலை மாற்றத்தினால் நோய்வாய்ப்பட்ட கனேடிய பெண்

by Jey

உலக அளவில் முதல் தடவையாக காலநிலை மாற்றத்தால் ஒருவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்க்படுகின்றது.

கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து கனடாவின் கூட்டேனே லேக் மருத்துவமனையின் டாக்டர் கைல் மெரிட் கூறியதாவது :

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த பெண்மணியின் உடல்நிலை கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.அவரது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க அவர் கடுமையாக போராட வேண்டியுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆண்டு கனடாவிலும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பதிவான வெப்ப அலைகள் நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன . பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக வெப்பத்தால் மட்டும் 233 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமேற்கில் உள்ள உயர் வெப்ப அழுத்தத்தாலும் மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தாலும் இவ்வாறு நிகழ்வதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

related posts