Home இந்தியா விவசாயிகளின் போராட்டத்தின் முதலாண்டு நிறைவு

விவசாயிகளின் போராட்டத்தின் முதலாண்டு நிறைவு

by Jey

: மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி இந்த போராட்டம் தொடங்கியது.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எதுவும் சாதகமான பலனைத் தராத நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாலும், அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்வோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் ( United Kisan Morcha) ஒன்பது பேர் கொண்ட குழு செவ்வாயன்று இந்த முடிவை எடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

3 விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து நவம்பர் 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. விவசாயிகள் சங்கங்களின் குடை அமைப்பான ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் ஒன்பது பேர் கொண்ட குழு செவ்வாயன்று இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்

related posts