Home கனடா பூஸ்டர் மாத்திரையாக பைசரை பயன்படுத்த கனேடிய சுகாதார திணைக்களம் அனுமதி

பூஸ்டர் மாத்திரையாக பைசரை பயன்படுத்த கனேடிய சுகாதார திணைக்களம் அனுமதி

by Jey

பூஸ்டர் மாத்திரையாக பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு கனேடிய சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் மாத்திரையாக பைசர் தடுப்பூசி போட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தடுப்பூசி மாத்திரை பெற்றுக்கொண்டு ஆறு மாதங்களின் பின்னர் இந்த பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

முன்னதாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் பல்வேறு நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பைசர் தடுப்பூசி தர நிர்ணயங்களுக்கு அமைவாக அமைந்துள்ளது என சுகாதார திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

related posts