கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களை பணி நீக்கம் செய்வதற்கு கனேடியர்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ள தயக்கம் காட்டுவோரை பணி நீக்கம் செய்வதே சிறந்த வழி என மக்கள் கருதுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்குஸ்ரெய்ட் என்ற நிறுவனத்தினால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனங்கள், பொலிஸ்துறை, பாடசாலை ஆசிரியர்கள், தீயனைப்புப் படையினர், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாவிட்டால் பணி நீக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.