பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலநிலை குறித்த எச்சரிக்கைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
சீரற்ற காலநிலை காரணமாக மாகாணத்தின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.