சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
இதனால்,வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் முறையே ரூ.5, 10 என – குறைக்கப்பட்டது. இதைப்பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ 4-ம், டீசல் மீதான வாட் வரியில் ரூ.5-ம் குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.