Home இந்தியா காற்றழுத்த தாழ்வு நாளை சென்னையை கடக்கிறது

காற்றழுத்த தாழ்வு நாளை சென்னையை கடக்கிறது

by Jey

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வடதமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் அதி கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது.

இதனால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

related posts