Home கனடா சீரற்ற காலநிலையினால் மக்கள் தொடர்ந்தும் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் மக்கள் தொடர்ந்தும் பாதிப்பு

by Jey

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவு, மழை வெள்ளம் மற்றும் சூறாவளி தாக்கத்தினால் மாகாணத்தில் பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக மாகாண முதல்வர் ஜோன் ஹோர்கன் அவசரகால நிலை பிரகடனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து சமூகத்தினருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகள் சென்றடைவதனை உறுதி செய்வதற்கு பயணத் தடைகள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களை விநியோகம் செய்வதற்கும், சுத்தமான குடிநீரை வழங்குவதற்கும் மத்திய அரசாங்கம் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய மளிகை பொருட்களை அதிகளவில் மக்கள் பதுக்கி வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

related posts