பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட சேதங்கள் மிகவும் அதிகமாக காணப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெருஞ் சூறாவளி, மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய பேராபத்துக்களினால் மாகாணத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சேத விபரங்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காப்புறுதி நிறுவனங்களுக்கும் பாரியளவில் நட்டஈடு வழங்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், வியாபாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் தொடர்பில் விரிவாக ஆய்வு மதிப்பீடு செய்யப்பட உள்ளது.