ஐந்து வயது முதல் பதினொரு வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் கோவிட் தடுப்பூசி பயன்படுத்த கனடாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் பிறந்த நாள் நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் சிறுவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதிக்குமாறு பைசர் நிறுவனம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த கனேடிய சுகாதாரத் திணைக்களம் குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.