சிறுவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிய முதல் விமானம் கனடாவிற்கு வருகை தந்துள்ளது.
கனடாவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என கனேடிய பொதுச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி தேசிய ரீதியில் சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி எற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் தொகுதி தடுப்பூசிகள் தாங்கிய விமானம், ஹமில்டன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் அதனை அமைச்சர் பிளோமினா டாஸி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த வார இறுதிக்குள் சிறுவர்களுக்கான 2.9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.