பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயங்கள் உருவாகியுள்ளது என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மாகாணத்தின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
கன மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடிய அபாய நிலைமை காணப்புடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் ஏற்கனவே 40 முதல் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கன மழையினால் பனிபடலம் உருகி வடிகாலமைப்புக்கள் அடைப்பு எடுக்க்க் கூடும் எனவும் இதனால் வெள்ள அனர்த்தம் மீண்டும் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ, மழை வெள்ளம், சூறாவளி, மண்சரிவு என பாரியளவில் இயற்கை அனர்த்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்கி பெரும் சேதங்களை விளைவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.