பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க சமஷ்டி படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட படையினர் இவ்வாறு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒட்டுமொத்த நிலைமைகளை அவதானித்தால் அது மோசமாகவே காணப்படுகின்றது எனவும், சில விடயங்களில் சாதக நிலைமை காணப்படுகின்றது எனவும் அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார்.
பூர்வகுடியின மக்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர நேரிட்டுள்ளது.
பெருந்தெருக்கள், கட்டிடங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு குறிப்பிடத்தக்களவு கால அவகாசம் தேவைப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.