2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளனர்.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்.
2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மைபலம் அரசிடம் இருந்தாலும் (113), மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு (150) மேலான ஆதரவு தக்கவைக்கப்படுமா என்ற வினா எழுகின்றது. குறிப்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் எம்.பிக்கள் நேசக்கரம் நீட்டும் பட்சத்தில் பெரும்பான்மை பலம் சாத்தியப்படும்.
இவ்விரு கட்சிகளின் உயர்பீடங்கள் பாதீட்டை எதிர்க்கும் முடிவை எடுத்திருந்தாலும் பெரும்பாலும் அக்கட்சிகளின் தலைவர்களைத்தவிர ஏனையோர் ஒன்று பாதீட்டை ஆதரிக்கக்கூடும் அல்லது வாக்கெடுப்பை தவிர்க்கக்கூடும் என்றே அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையைப்பெற்று 24 தமிழ் வேட்பாளர்கள் அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றம் தெரிவானார்கள். இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு ஆகியவற்றால் 9 ஆவது நாடாளுமன்றத்தில் மொத்தமாக 27 தமிழ்ப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதீடு தொடர்பான அவர்களின் நிலைப்பாடுகளும் வருமாறு,
இலங்கைத் தமிழரசுக்கட்சி
1. இரா.சம்பந்தன் – எதிர்ப்பு
2. தர்மலிங்கம் சித்தார்த்தன் – எதிர்ப்பு
3. செல்வம் அடைக்கலநாதன் – எதிர்ப்பு
4. எம்.ஏ. சுமந்திரன் – எதிர்ப்பு
5. எஸ். ஶ்ரீதரன் – எதிர்ப்பு.
6. வினாநோதராதலிங்கம் – எதிர்ப்பு
7. சார்ள்ஸ் நிர்மலநாதன் – எதிர்ப்பு
8. கலையரசன் – எதிர்ப்பு
9. கருணாகரன் – எதிர்ப்பு
10. கலையரசன் – எதிர்ப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி
1.மனோ கணேசன் – எதிர்ப்பு
2.வீ.இராதாகிருஷ்ணன் – எதிர்ப்பு
3.பழனி திகாம்பரம் – எதிர்ப்பு
4.வேலுகுமார் – எதிர்ப்பு
5. உதயகுமார் – எதிர்ப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – எதிர்ப்பு
2. செல்வராசா கஜேந்திரன் – எதிர்ப்பு
தமிழ் மக்கள் தேசியக் கட்சி
1. சிவி விக்னேஸ்வரன் – எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தி
1. வடிவேல் சுரேஷ்
ஆளுங் கூட்டணி –
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி
1. டக்ளஸ் தேவானந்தா – ஆதரவு
2. குலசிங்கம் திலீபன் – ஆதரவு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
1.ஜீவன் தொண்டமான் – ஆதரவு
2. மருதபாண்டி ராமேஸ்வரன் – ஆதரவு
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
1. அங்கஜன் ராமநாதன் – ஆதரவு
2.சுரேன் ராகவன் – ஆதரவு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
1. வியாழேந்திரன் – ஆதரவு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
1. பிள்ளையான் -ஆதரவு
சிலவேளை இன்றைய சபை அமர்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் காரணத்துக்காக பங்கேற்காத பட்சத்தில் மேற்படி எண்ணிக்கையில் மாற்றம் வரக்கூடும்.