கனடாவில் ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் சுமார் 81000 ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும், குறித்த இலக்கினை அடைவது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்க அனுசரணையுடன் 12500 ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்குவதாக உறுதி வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் 7800 ஏதிலிகள் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தனியார் அனுசரணையின் கீழ் 22500 பேருக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டிய நிலையில் இதுவரையில் 4500 பேருக்கு மட்டுமே அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று நிலைமைகளினாலும் வேறும் காரணிகளினாலும் இவ்வாறு ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.