ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சுற்றுலாத் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஒன்றாரியோவின் சில பகுதிகளில் இன்று இரவு சுமார் 25 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ பெரும்பாக பகுதியின் அநேக இடங்களில் கூடுதல் அளவில் பனிப்பொழிவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் நீடிக்கும் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.