Home கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவை மீளவும் சூறாவளி தாக்கும் அபாயம்

பிரிட்டிஷ் கொலம்பியாவை மீளவும் சூறாவளி தாக்கும் அபாயம்

by Jey

பிரிட்டிஷ் கொலம்பியாவை மீளவும் சூறாவளி தாக்கக் கூடிய அபாயம நிலவி வருவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாகாணத்தை அண்டிய வளிமண்டலத்தில் தொடர்ந்தும் அழுத்த நிலைமையை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீளவும் மாகாணத்தில் கன மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் தென் கரையோரப் பகுதியில் கடுமையான காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு மலைப் பகுதியில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

related posts