ஒன்றாரியோ மாகாணத்தில் தொடர்ந்து கோவிட் அவசரகால உத்தரவுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த உத்தரவுகள் அமுலில் இருக்கும் என மாகாண அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது அமுலில் உள்ள அவசரகால உத்தரவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி காலாவதியாகும் நிலையில், இந்த உத்தரவுகளை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கோவிட் தொற்று அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் மாகாணத்தை முழுமையாக திறக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.