கேப் பிரடென் மற்றும் நியூபவுன்ட்லாண்டில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புயல் தாக்கம் மற்றும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கேப் பிரடெனில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் வீதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ் கனடா பெருந்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கரையோரப் பகுதிகளில் சுமார் 120 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்துள்ளது.