ஒன்றாரியோவில் மூன்று நண்பர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் 21 மில்லியன் டொலர்களை வெற்றியீட்டியுள்ளனர்.
லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பெருந்தொகை பணத்தை வெற்றியீட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கெனத் நிஸ்டோலிஸ் மற்றும் றொரன்டோவைச் சேர்ந்த பில் டெப்லினஸ் மற்றும் டினோ மார்டினோ ஆகிய நண்பர்களே இவ்வாறு பெருந்தொகை பணப் பரிசினை வென்றுள்ளனர்.
மின்னஞ்சலை பார்த்த போது 21000 டொலர் பரிசு கிடைத்துள்ளது என கருதியதாகவும் பின்னர் பூச்சியங்களை பார்த்த போது அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று நண்பர்களும் கடந்த 2005ம் ஆண்டு முதல் சுமார் 16 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பு போட்டிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.