காலநிலை மாற்றத்திற் தாக்கம் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தம் பற்றி அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் சீக்கிரமே ஏற்பட்டுள்ளது என்பதே பிரிட்டிஷ் கொலம்பியா அனர்த்தம் பறைசாற்றி நிற்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களையே பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.