பிளக் ப்ரைடே (Black Friday) மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் பிளக் ப்ரைடே மற்றும் சைபர் மன்டே ஆகிய இரண்டு தினங்களில் பாரிய விலைக் கழிவுகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமையாகும்.
நன்றியறிள் நாளின் பின்னர் வரும் முதல் வெள்ளிக்கிழமையன்று இந்த பிளக் ப்ரைடே அமெரிக்காவில் பிரபல்யமானது.
தற்பொழுது கனேடிய சமூகத்தினரும் குறிப்பாக வாடிக்கையாளர்களும் பிளக் ப்ரைடேவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இணைய வழியில் கொள்வனவு செய்யப்படும் போது நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்ந்து அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமேன தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகமான நிறுவனங்களின் பொருட்களை மட்டும் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் 1-888-495-8501 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.