அட்லாண்டிக் கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
நோவா ஸ்கோட்டியா மற்றும் தென்கிழக்கு நியூபவுண்ட்லாண்ட் ஆகிய பகுதிகளில் புயல்காற்று மற்றும் மழை வெள்ளத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வீதிகள், பெருந்தெருக்கள் உடைந்து பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பொருட்களை விநியோகம் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
பாதைகளில் உடைந்துள்ளமையினால் சில பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.