Home இந்தியா உரிமைக்கா அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது…?

உரிமைக்கா அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது…?

by Jey

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டத்தின் விளைவாக புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்கிடையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் (நவ.26) ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், உரிமைக்காக அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பது குறித்து விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் வெப்பம் – குளிர் மற்றும் மழை – புயலுடன் நிறைய சதிகளையும் சந்தித்துள்ளது. உரிமைக்கா அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பதை நாட்டு விவசாயிகள் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளனர். அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். விவசாய சகோதரர்களின் உத்வேகம், தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்

related posts