ஒன்றாரியோ மாகாணத்தில் பண்டிகை கால கொண்டாட்டங்கள் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகை, புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாகாணத்தின் பிரதம சுகாதார மருத்துவ அதிகாரி டொக்டர் கிரன் மோர் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் மாகாணத்தில் நோய் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறைக் காலத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தொற்று நிலைமை இன்னமும் முடியவில்லை என்பதனை மக்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.