Home கனடா வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் விஜயம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் விஜயம்

by Jey

மழை  வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவின் பகுதிகளுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே விஜயம் செய்ய உள்ளார்.

புயல் காற்று, மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விக்டோரியா மற்றும் அபோட்ஸ்போர்ட் ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் ட்ரூடோ விஜயம் செய்ய உள்ளார்.

மாகாணத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை அபாயங்கள் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மாகாண முதல்வர் ஜோன் ஹோர்கனையும் இன்றைய தினம் சந்திக்க உள்ளார்.

related posts