ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 4.3 அளவில் பதிவாகி இருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து 316 கி.மீ. தெற்கில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.