கோவிட் பெருந்தொற்றின் மற்றுமொரு ஆபத்தான திரிபான ஒமிகோர்ன் பரவுகை காரணமாக சில நாடுகளுக்கு கனடா, பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க நாடுகளான, தென் ஆபிரிக்கா, மொஸம்பிக், பொஸ்ட்வானா, எஸ்வாயிட்டினி, சிம்பாப்வே, லெசேதோ மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய திரிபினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்படுவதாக கனேடிய பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் கடந்த 14 நாட்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.